277-167-808 -ன் கனமூலம்
கனமூலம் கண்டுபிடிக்கும் வழியை மஹாவீராசார்யர், பரிகர்மம் என்ற அத்தியாயத்தில், 53-ஆவது ஸ்லோகத்தில் விளக்குகிறார். அந்த வழியைப் பார்ப்பதற்கு முன், கனம், மற்றும் கனமூலத்தைப் பற்றிச் சில வார்த்தைகள்.
f(x) = x3
இந்தச் சார்பு, ஓரிலக்க எண்களுக்கு 1, 8, 27 என்று மெல்லத் துவங்கி, கிட்டத்தட்ட செங்குத்தாக உயரும் தன்மையைக் கொண்டது. இரண்டு இலக்கம் வரும்போது, பத்தாயிரத்தைத் தொடும்.
இரண்டு இலக்கத்தில் 90, 91 என்று அதிக பட்ச எண்ணான 99-க்கு வரும்போது, கிட்டத்தட்ட 10 இலட்சத்தைத் தொட்டுவிடும். 100-கனம் ஒரு மில்லியன். 1000-ன் கனம் ஒரு பில்லியன்
நான்கு இலக்க எண்ணின் அதிகமான 9,999 -கு ஒரு இலட்சம் கோடியைத் தொட்டுவிடும்!
அதனால், தினசரி வாழ்க்கையில், நமக்குக் கன மூலம் கண்டுபிக்கவேண்டிய எண்கள், பத்து இலட்சம் போனாலேயே அதிகம். இன்னொரு விதத்தில் சொன்னால், 1000 தான் நாம் நடைமுறையில் சந்திக்கும் அதிகபட்ச கனமூலமாக இருக்கும்.
மஹாவீராசார்யர் காலத்தில் எதிர்கொள்ளும் எண் சிறிதாகத்தான் இருந்திருக்கும். அதிகபட்ச கனமூலம் 1000-க்குள் இருந்தால், கனமூலம் காணவேண்டிய எண்ணுக்கு ஒன்பது இலக்கத்துக்கு மேல் இராது.
ஒன்பது இலக்க எண், மூன்று தொகுதிகளாக எழுதப்படும்.
7,73,08,776
என்ற எண், 077-308-776 என்பது போலவும், 27,71,67,808 என்ற எண் 277-167-808 என்பது போலவும்
எழுதப்படும்.
No comments:
Post a Comment