நியாயாதிபதி வீட்டு விருந்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட இரண்டு கணக்குக்கள்
எத்தனை
உண்மைகள், எத்தனை பொய்கள்
ஒரு பெண் ஐந்து ஆண்களுடன் பழகி வருகிறாள். மூவரை மட்டும்தான் அவளுக்குப் பிடிக்கும். ஆனால், ஒவ்வொருவரிடமும் உன்னை எனக்குப் பிடிக்கும், மற்ற ஆண்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி, அவனைப் பிடிக்காது என்கிறாள். அவள் பேசிய பொய் வசனங்கள் எத்தனை?
மொத்தம் பேசியது இருபத்தைந்து வசனங்கள் சொல்கிறாள். விரும்பும் மூவரிடமும் உன்னை விரும்புகிறேன் என்றது மெய். விரும்பாத இருவரை விரும்பவில்லை என்றது மெய். விரும்பும் மற்ற இருவரின் பேரைச் சொல்லி, அவர்களை விரும்பவில்லை என்றது பொய். இப்படி விரும்பும் மூவரிடமும் இரண்டு பொய்கள், மூன்று மெய்கள் சொல்லியிருக்கிறாள். விரும்பிய மூவரிடமும் சொன்ன மொத்தப் பொய்கள் ஆறு. மொத்த மெய்கள் ஒன்பது.
விரும்பாதவர்களிடம் விரும்பிய மூன்று பேரைச் சொல்லி விரும்பவில்லை என்கிறாள். மூன்று பொய்கள். அவனை விரும்பாதபோது, விரும்புகிறேன் என்கிறாள். அதுவும் பொய். நான்கு பொய்கள். விரும்பாத மற்றவன் பேரைச் சொல்லி அவனை விரும்பவில்லை என்கிறாள். அது மெய். இப்படி இரண்டு விரும்பாதவர்களிடம் அவள் சொன்னது மொத்தம் எட்டு பொய்கள், இரண்டு மெய்கள். ஏழு பேரிடமும் சொன்னது, பதினான்குபொய்கள், 11 மெய்கள்.
விரும்புகிறவர்களில் ஒன்றைக் கூட்டி (3+1), அதை மொத்தப்பேர்களால் (5) பெருக்கவேண்டும். பெருக்கிவந்ததில் (20) இருந்து, விரும்புகிறவர்களின் இரண்டு மடங்கைக் (3x2 = 6) கழித்துவிட வேண்டும். அதாவது, ஐந்தையும் நான்கையும் பெருக்கி, ஆறைக் கழித்தால் பதினான்கு. இதுதான் மொத்தப்பொய்.
பிரசாதக்
கூடையில் எஞ்சியிருந்த பிரசாதங்கள் எத்தனை?
முதல் பள்ளி ஆசிரியர்கள். தம் பள்ளியில் மற்ற ஆசிரியரிடம் கற்கும் மாணவர்களுக்குப் பிரசாதம் தர மறுத்துவிட்டார்கள். இரண்டாம் பள்ளி ஆசிரியர்கள், தம்மிடம் கல்லாத, தம்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பிரசாதம் அளித்தார்கள். இப்போது, பிரசாதக் கூடையில் எத்தனை பொட்டணங்கள் எஞ்சி இருந்தன?
மொத்தம் 49 பொட்டணங்கள்.
முதல் பள்ளியின்
மாணவனுக்கு, அவனுடைய
ஆசிரியர் தவிர, வேறு
ஆசிரியரிடம் பிரசாதம் கிடைத்திருக்காததால், முதல் பள்ளியின் ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரசாதம் மட்டுமே செலவாயிருக்கும்.
நான்கு மாணவர்களுக்கு நான்கு பிரசாதம். இரண்டாம் பள்ளியின் மாணவனுக்குத் தன்னுடைய ஆசிரியர் தவிர,
மற்றெல்லாரிடமும் இருந்து
பிரசாதம் கிடைத்திருக்குமாதலால், ஆறு பிரசாதம். மூன்று மாணவர்களுக்கு, 18 பொட்டணங்கள். மொத்தம் 22 பொட்டணங்கள் செலவாகியிருக்கும். கூடையில்
எஞ்சி இருப்பது 27 பொட்டணங்கள்.
மஹாவீராசார்யரின் சூத்திரத்தின் படி, முதல் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையுடன் ஒன்றைக் கூட்டி (4+1), அதை மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையால் (7) பெருக்கவேண்டும். பெருக்கிவந்ததில் (35) இருந்து, முதல் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையின் இரு மடங்கைக் (4x2 = 8) கழித்துவிட வேண்டும். இருபத்தேழு. இதுதான் கொடுக்கப்படாத பிரசாதங்கள்.
ad
No comments:
Post a Comment