Monday, 30 September 2024

௮. அருஞ்சொலும் அருத்தமும்

 உபோற்காதத்தில் உரைத்தது போல, இக்கதையில், பண்டைக்காலச் சொற்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாசர்களுக்கு எளிதாக இருக்கும் வகையில்,  இங்கே, சிலவற்றுக்குப் பொருள் தர முயன்றிருக்கிறேன். 


வ. எண்

சொல்

பொருள்

1

அகல்தொடை

அகலமாகத் தொடுத்த

2

அங்க விநோதம்

Duel

3

அசச்சார்தூல

ஆடுபுலி

4

அசி

ஆயுதம், வாள்

5

அசி வேதனம்

ஆயுதம் தாங்கிய வீரர்களுக்கான கூலி

6

அசும்பு

கசிவு, ஊற்று

7

அச்சுறு கொழுந்தொடர்

தரையில் அடித்த ஆப்பில் விலங்குகளைக் கட்டும் சங்கிலி

8

அடலறாத்தானை

அடல் அறாத தானை

9

அடலை

சாம்பல்

10

அடலை

சாம்பல்

11

அடைகல்

நீரைத் தடுத்துவைக்கும் அணைகல்

12

அடைக்காய்

தாம்பூலம்

13

அட்டச் சிவிகை

எட்டு பேர் தாங்கும் சிவிகை

14

அயிர்மண்

fine sand

15

அரலை

சிடுக்கு

16

அரில் மறில்

சச்சரவு, பிணக்கு

17

அரில்கள்

மூங்கில்

18

அருகல்

குறைவு

19

அருப்பம்

திண்மை

20

அலவலை

குழப்பம்

21

அலவன்

நண்டு

22

அவகாஹன

அமிழ்ந்து

23

அவலம்பம்

சார்பு, Support

24

அழக்குடம்

பிணக்குடம்

25

அளிந்தம்

திண்ணை

26

அனஹிலாபுரம்

பாடன்

27

ஆகுலம்

மனக்கலக்கம்

28

ஆகுலம்

வருத்தம்

29

ஆக்கிரம்

கடுகோபம்

30

ஆச்சா

சாலமரம்

31

ஆச்சியம்

நெய்

32

ஆபம்

நீர்

33

ஆராமுகம்

குத்தூசி போன்ற கூரிய முனையுடையவை

34

ஆருகதர்

சமணர்

35

ஆரை

புற்பாய்

36

ஆலீடம்

இடக்கால் முந்துற்று வலக்கால் மண்டலித்தல்

37

ஆவம்

அம்பிருக்கும் தூணி

38

ஆளி

பாலம்

39

ஆறாவுதல்.

அடித்தல்

40

இகத்தல்

முரண்படுதல்

41

இங்கு

பெருங்காயம்

42

இங்குளி மரம்

பெருங்காயம்

43

இட்டிய

ஒடுங்கிய

44

இபம்

யானை

45

இரக்கை

ரக்ஷை

46

இரட்டையொட்டு

double hinged

47

இலிங்கவட்டம்

கிணற்றைச் சுற்றி இருக்கும் மரச் சுவர்

48

இளங்கால்

இளமை ப் பருவம்

49

இறும்பு

குறுங்காடு

50

இற்செறிப்பு

பெண்கள் வீட்டை விட்டுச் செல்லாமல் வைத்தல்

51

ஈங்கம்

சந்தனம்

52

உசவுதல்

ஆலோசித்தல்

53

உஞற்று

ஆர்வம், உழைப்பு, முயற்சி

54

உஞற்றுதல்

வருத்திக் கொள்ளுதல்

55

உடல் உயவல்

வருத்துதல்

56

உடறல்

உடல்-தல், சினத்தல்

57

உடன்று

bickering

58

உண்டறுத்தல்

செரித்தல், assimilate

59

உதராந்திரம்

குடல்

60

உபோற்காதம்

ஆக்கியோன் நூன்முகப்பில் அறைசொல்

61

உரப்பு

Uncouth, Immatured

62

உலவை

கிளை

63

உலைப்பாடு

Excitement

64

உலைவு

நடுக்கம், தளர்வு

65

உல்லங்கனம்

வரம்பு மீறல்

66

உவா

பௌர்ணமி

67

உழலை

Sugarcane Press

68

உழன்று அறுத்தல்

கடின வேலை செய்தல்

69

உழுவை

புலி

70

உளுக்கு

பிரச்சினை

71

உறழ்

Combinations

72

எக்காளம்

Trumpet

73

எண்பெருங் காடுகள்

8 Forest areas

74

எருத்தம்

கழுத்து

75

எறிவ

எறியப்படும் ஈட்டி போன்றவை

76

ஏந்தல்

உட்கிடைக் கிராமம்

77

ஏந்தானம்

Hanging shelf

78

ஏறாளர்

எறிபவர்

79

ஐங்காயம்

கடுகு, வெந்தயம், ஓமம், பெருங்காயம், பூண்டு

80

ஒருவந்தம்

Lonely

81

ஒவர்கள்

சித்திரக்காரர்கள்

82

ஓச்சுதல்

விரட்டி விடுதல்

83

ஓதிம

அன்னம்

84

ககினை

Tributary of Bhima river

85

கடகம்

கெண்டி ,

86

கடவுட்பராவி

கடவுத்துதி

87

கடிகை

பொறி

88

கணை

சிவிகையின் வளைகொம்பு

89

கது

மலைப் பிளவு

90

கதுக்கம்

மலைப் பிளவு

91

கபிலை

ஏற்றம்

92

கம்மியர்

நெய்பவர்

93

கயக்கு

மனச்சோர்வு

94

கரணை

கரும்புத் துண்டு

95

கருமடலை

கரிய சாம்பல்

96

கரும்பு தெற்றி

கரும்பைக் காய்ச்சி

97

கலாய்த்தல்

வம்பு இழுத்தல்

98

கலித்தல்

ஒலித்தல்

99

கவலை

ஏற்றம்

100

கவை

பிளவு, fork

101

கவைத்தல்

Fork, வழி பிரிதல்

102

கறு

மனவெறுப்பு

103

கனிட்டை

சுண்டுவிரல்

104

காணம்

வரி

105

கால்கழி

பாடை

106

காவணம்

சோலை

107

காளம்

சூலம்

108

கான்றல்

இருமல்

109

கிடந்துருளை

Rolling Stone

110

கிடவாக்கிடை

பெருந்துன்பம்

111

கிரிச்சம்

வருத்தம்

112

கீதி

கீதம்

113

குக்கில்

குங்கிலியம்

114

குடுமித்தல்

கூட்டுச் சேர்ந்த

115

குரண்டம்

கொக்கு வகை

116

குரம்பை

தானியம் சேகரிக்கும் கூடு

117

குரிசில்

பெருமை உடையவர்கள், Holders of dignity

118

குரோசம்

2 1/4 மைல்

119

குழுதாழி

மாட்டுத்தொட்டி

120

குறும்படிக்கால்கள்

குறுகிய உயரம் உடைய படிகள்

121

குற்றி

வாய் குறுகிய பாத்திர வகை

122

கூவிரம்

தேர் முகப்பு

123

கொடுமடி

இடை முடிச்சு

124

கொதுவை

அடமானம்

125

கொளுக்கி

கொக்கி

126

கொற்றவள்ளை

தோற்ற வேந்தன் கொடுக்கும் திறை

127

கொற்றுறை வினைஞர்

கொல்லன்

128

கொன்வேளை

விடியற்காலை

129

கோசம்

கருவூலம்

130

கோசம்

கருவூலம்

131

க்ஷேத்ரக் கிரீடை

மார்கழி, தை மாதங்களில், வயல்களில்  பெண்களுடன் தலைவன் பாசறை அமைத்துத் தங்கி விளையாடும் விளையாட்டு

132

சகடை

மரணச் சடங்கில் ஊதும் வாத்தியம்

133

சக்கரமர்தகம்

தோலுக்கான மூலிகை

134

சசிவர்

செயலர்

135

சசிவர்

அமைச்சர்

136

சடகம்

வட்டில்

137

சப்தபேதி

ஒலியைப் பகுத்துணர்பவர்கள்

138

சம்பீரம்

எலுமிச்சை

139

சரணர்

அடியவர், அடைக்கலம் புகுந்தோர்

140

சல்லியம்

ஈட்டி

141

சஸ்திரக் கிரீடை

ஆயுதங்களை வைத்துக்கொண்டு விளையாடுதல்

142

சஸ்திரம்

ஆயுதம்

143

சாத்து

வணிகக் கூட்டம்

144

சாரியை

அசைவு

145

சால்

வாளி

146

சாவேறு

தற்கொலைப் படை

147

சிச்சுருடை

நோயாளிகளைக் கவனித்தல்

148

சிதர்வை

கந்தல்

149

சிவிறி

விசிறி

150

சிவை

நெல்லி

151

சிறுதூறு

சிறுபுதர்

152

சின்னமூதிகள்

தண்டோரா போடுபவர்கள் (சின்னம் ஊதிகள்)

153

சீத்தல்

கீறித் துடைத்தல்

154

சீமத்து

பேறு, பாக்கியம்

155

சுபுகம்

மோவாய்

156

சுரதம்

புணர்ச்சி

157

சுலவுதல்

சுழலுதல்

158

சூசித்தல்

சுருக்கிச் சொல்லுதல், Summarize

159

சூறையள்

கணிகை

160

செக்கர்

சிவப்பு

161

செங்கழை

கரும்பு

162

செதும்பு

சேறு

163

செந்நீர்ப் பொதுவினை

பொதுமக்களுக்கான குடிநீர் ஏற்பாடு

164

செய்யல்

Slush

165

செருநர்

போர்வீரர்

166

செவியடி

நெல்லைக் கதிரடித்தவுடன், களத்திலேயே சேகரித்து வைக்கும் இடம்

167

சேணியர்

நெசவு செய்பவர்

168

சேண்

தூரம்

169

சேதித்தல்

வெட்டுதல்

170

சேவுணர்

Saunas of Devagiri

171

சௌக்யதாயகக் கஞ்சி

சௌக்கியம் தரும் கஞ்சி

172

ஞெலிதல்

தீக்கடைதல்

173

தகரஞாழம்

ஒரு வாசனை மயிர்சாந்து

174

தட்டம்

தட்டு

175

தலைக்கட்டு

முடிவாக

176

தலைநீவி

மூலதனம்

177

தவள

வெண்மை

178

தவறை

வலுவுள்ள பொருள்களை உயர்த்தவும் நகர்த்தவும் உதவும், சங்கிலியமைத்த சக்கரங்கள்

179

தவிசு

Small stool

180

தளிதல்

தெளிவடைதல்

181

திம்மை

பந்து

182

திரிகூடகம்

சூலம்

183

திரிவை

அரைக்கும் யந்திரம்

184

திறப்படுதல்

ஊர்ஜிதமாதல், ஸ்திரமாதல்

185

துண்டகவிஷயம்

தொண்டை விஷயம், தொண்டை மண்டலம்

186

துனி

கோபம்

187

தூங்கல்

தராசு

188

தூலிகை

திரி

189

தூறு

சுடுகாடு

190

தெருட்டுதல்

அறிவுறுத்துதல்

191

தெறுதல்

காய்ச்சுதல்

192

தேக்கெறிதல்

ஏப்பம் விடுதல்

193

தேவகுலம்

கோவில்

194

தைவருதல்

தடவுதல், வருடுதல், தேய்த்தல்

195

தொடுப்பு.

கட்டு

196

தொந்தனைத் துவட்சி

உடலுறவுக்காக விழைதல்

197

தொய்யல்

Pleasure

198

தொள்ளுதல்

தொடுதல்

199

நண்ணுதல்

நெருங்குதல்

200

நியுக்தர்கள்

வருவாய் அதிகாரிகளுக்குத் துணைபுரிய நியமிக்கப்பட்டவர்கள்

201

நிலையர்

ஸ்திரமான சேவகர்கள்

202

நிவிர்த்தி

விடுதலை

203

நூழில்

Slaughter, கொன்று குவித்தல்

204

நொடிசொல்

விநாடிவினா

205

பஃறகை

பல் தகை

206

பகர்த்தல்

பிரதி எடுத்தல்

207

பக்கு

Shoulder Bag

208

பசதி

சமணக் கோயில்/ மடம்

209

பஞ்சரம்

கூண்டு

210

படிவர்

முனிவர்

211

பட்டடை

பட்டறை

212

பணிசுதமத சித்தாந்தம்

பதஞ்சலியின் ஒரு யோக சிந்தாந்தம்

213

பண்டனம்

போர்

214

பண்ணுறுதல்

ஆயத்தமாதல், பதப்படுதல்

215

பதகம்

பறவை

216

பதிவிளக்கு

மந்திரவாதிகள் நிறுவும் சமிக்ஞை காட்டுவதாக கருதப்படும் விளக்கு

217

பயம்பு

குழி

218

பரவி

பரப்பிக்க சமன்செய்யப்பட்ட புன்செய் நிலங்கள்

219

பரிச்சேதம்

Discriminate, பகுத்துப் பார்த்தல்

220

பரித்தல்

அறுத்தல்

221

பள்ளக்காடு

பள்ளத்தில் இருக்கும் புன்செய் நிலங்கள்

222

பாணப் பதங்கள்

பாணம் எய்யும் தூரம்

223

பாண்டில்

இரு சக்கர வண்டி

224

பாதிக்கை

Impact

225

பாந்தல்

சிற்றூர்

226

பாரிப்பு

Hugeness, பெருமை

227

பாலித்துவசம்

சாளுக்கியக் கொடி

228

பிசி

Puzzle

229

பிதிர்

புதிர்

230

பிதிர்

Puzzle

231

பிரசூதி

பிரசவம்

232

பிரதிமானம்

யானையின் முகப்பகுதி

233

பிரத்தியாலீடம்

வலக்கால் முந்துற்று இடக்கால் மண்டலித்தல்

234

பிரேலிகை

புதிர்

235

புகல்

தானியக் குதிர்

236

புக்தி

இராஜ்ஜியத்தின் நிர்வாகப் பிரிவு

237

புணை

தெப்பம், கட்டுமரம்

238

புதவம்

கதவு

239

புதா

கதவு

240

புதுக்குடம் கரும்பு தெற்றி

குடம் (gud) வெல்லம், தெறுதல் - காய்ச்சுதல்

241

புத்தடலை

புதிய சாம்பல்

242

புய்த்தல்

வேரோடு கழலுதல்

243

புல்குதல்

அணைதல், புணர்தல்

244

புற்கை

கஞ்சி

245

பூட்சி

Uniform, Robe

246

பூதாரக் கிரீடை

செய்குன்றில், சோலைகள் சூழிடத்தில், நிகழும் வன விளையாட்டுக்கள்

247

பூழை

இடுக்கு, கணவாய்

248

பைது

ஈரம்

249

போட்டிக்கை

போட்டி மனப்பான்மை

250

மஞ்சிகை

பெரிய கொட்டாரம்

251

மண்ணைக் கடக்கம்

மான்ய கேதம்

252

மத்திகை

சாட்டை

253

மந்தணம்

இரகசியம்

254

மரவானம்

Wooden loft, மரப் பரண்

255

மஹாத்தரர்

பிரமுகர்

256

மிண்டான்

நெருங்கினான்.

257

முசலம்

உலக்கை

258

யவை

வாற்கோதுமை

259

யுக்தர்கள்

பரம்பரை வருவாய் அதிகாரிகள்

260

ரதிக்கிரீடை

புணர்ச்சி

261

வடிம்பு

ஓரம்

262

வரண்டகம்

யானை மீதுள்ள இருக்கை

263

வரிவசிதம்

Personal care

264

வலசை

இடம் பெயர்தல்

265

வல்சி

அரிசி

266

வாககன்

சுமந்து செல்பவன்

267

வாஜி

குதிரை

268

விஞ்சைவாதி

அறிவியல் கண்ணோட்டம் உடையவர்கள்

269

விடம்பனம்

நாடகம்

270

விஷயங்கள்

மாவட்டம்

271

வீளைசெய்தல்

Whistle, ஊளையிடுதல்

272

வெந்தை

வேக வைத்த

273

வெள்ளொளிப் பிராயம்

வெள்ளெழுத்துப் பிராயம், முதுமை

274

வேதனம்

கூலி

275

வைவஸ்வதராஜன்

யமன்

276

ஜ்யோஸ்த்னா கிரீடை

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில், நிலவொளியில், பெண்களுடன் தலைவன் விளையாடும் விளையாட்டு

277

ஸாமந்தரன்

Commander

278

ஸ்வஸுரர்கள்

மணமக்களுடைய பெற்றோர்கள்




No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...